களுத்துறை (Kalutara) – கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஓரளவு வெளிச்சம்
அந்த வகையில், களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் அங்கு நின்றவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிலிருந்து ஓரளவு வெளிச்சம் வெளிப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.