ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் இன்னும் ஐந்து வருடங்களில் கற்பிக்க பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்தார்.
இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புரிந்து கொள்ள வேண்டும்
ஆசிரியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர், குழந்தைகள் யாராவது நோய்வாய்ப்பட்டு நலம் பெறுவார்கள் என்று காத்திருப்பதில்லை என்றார்.
இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி சுகவீன விடுமுறை போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.