முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர்

யாழ். விமான நிலையம் (Jaffna Airport) உட்பட இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் (Dr. S. Jaishankar), அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு (Sri Lanka) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கோட்டையிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று (20) இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

அதன்படி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

துறைமுகங்களின் அபிவிருத்தி 

எரிசக்தி இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மேம்பாடு, எல்.என்.ஜி விநியோகம், இரு நாடுகளுக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் குழாய், எரிபொருள், எரிவாயு ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர் | Indo Sri Lanka Joint Development Projects

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் பால் உற்பத்தியை ஊக்குவிக்க நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் செயல்திறன் மற்றும் உர உற்பத்தி தொடர்பான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

திருகோணமலையின் அபிவிருத்திக்காகவும், காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காகவும் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாழ் விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலான விமான நிலையம் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர் | Indo Sri Lanka Joint Development Projects

அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முதற்படியாக, இலங்கைக்கான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விவசாயம், தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தேசிய பாதுகாப்பு மற்றும் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக் குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.