Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தை பெறும் இந்தியாவின் (India) முயற்சிக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை (S. Jaishankar) சந்தித்தபோது இந்த ஆதரவை தாம் வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார – அரசியல் எழுச்சி
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கான முயற்சியில் இந்தியா 1990ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையிலேயே உலக அரங்கில், இன்று இந்தியா அடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சியின் அடிப்படையில் இது அவசியமான ஒன்றாகும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.