யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாயில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்பாய் – இராச பாதையில் நேற்று (22) இரவு 11 மணியளவில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் பயணித்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.