இலங்கையின் சுகாதாரத்துறையை வலுவூட்ட வேண்டும் என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் (Faris H. Hadad-Zervos) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது.
இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களுக்கான முகங்கொடுப்பு
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்துரைக்கும் போதே உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுகாதாரத்துறை திறன் சிறப்பாக உள்ளபோதிலும், வளரும் சுகாதார சவால்களுக்குத் தாயாராகும் வகையில் சக்திமயப்படுத்த வேண்டும்.
இந்த நிதியுதவியின் மூலம் மக்களை மையப்படுத்தியதும், உடன் செயலாற்றக்கூடியதுமான சுகாதார சேவையின் முன்னோக்கிய நகர்வை உறுதி செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.