வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 57 ஆவது நாளாகவும் தமது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சத்யாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வு
இந்நிலையில், நேற்றைய தினம் (26.06.2024) கொழும்பில் பாடசாலை ஆசிரியர், அதிபர்களது போராட்டத் தளத்தில் அவர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து இன்று குறித்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமது நியாயமான கோரிக்கையாக
காணப்படுகின்ற சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனக் கூறியும் ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.