எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeyratne) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்ச கட்டணம்
தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.