முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசபந்துவிற்கு வெளிநாட்டு பயணத் தடை ! வலுக்கும் சர்ச்சை

முன்றாம் இணைப்பு

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பு உட்பட அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு வீடுகள் நேற்று (28) தேடுத்ல மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் எதிலும் அவர் தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

துப்பாக்கிச் சூடு

இது தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எண் 6314/323 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்துடன், கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபந்துவிற்கு வெளிநாட்டு பயணத் தடை ! வலுக்கும் சர்ச்சை | Search Of Former Igp Deshabandu Investigation

தற்போது, குற்றப் புலனாய்வு திணைக்களித்தின் காவலில் உள்ள பாதாள உலக குழு உறுப்பினர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குழுவைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் டிசம்பர் 31, 2023 அன்று சென்றபோது குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.