கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை இரண்டு மற்றும் மூன்று ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை இரண்டாம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள்
இந்தநிலையில், ஜூலை மூன்றாம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.