அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடவுள்ள அதிபர் பைடனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அதிபர் பைடனின் வயது மூப்பு மற்றும் அவரின் தளர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தடுமாற்றம்
அத்துடன் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும் அதிபர் பைடனுக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தில் கூட, பைடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
மிச்செல் ஒபாமா
இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழக்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.