முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: பாம்பனில் கண்டன போராட்டம்

Courtesy: Sivaa Mayuri

புதிய இணைப்பு

எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன் 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய
தமிழ்நாடு பாம்பன் கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுதலை
செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து 50ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள்
இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது
அப்பதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு
படகுகளையும் அதிலிருந்த 25
கடற்றொழிலாளர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்
சென்றுள்ளனர்.

அங்கு முதல் கட்ட விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழிலாளர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம்
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

செய்தி – ஆஷிக்

முதலாம் இணைப்பு

தமிழ்நாட்டை (Tamil Nadu) சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (01.07.2024) அதிகாலை 25 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை விசாரணை

இதன்படி கடந்த ஜனவரி முதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

continuity-25-more-indian-fishermen-arrested-

சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

அத்துடன் தனது கடல் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.