நாட்டில் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் போது தொழில்துறை எதிர்கொண்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சந்தை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 இன் பிற்பகுதியில் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் உதவியுடன் லாப்ஸ்(Laugfs Gas) எரிவாயுக்கான உள்நாட்டு தேவை விரிவடைந்து வருகின்றது.
நுகர்வோர் எரிவாயு வாங்குவது தொடர்பில் விழிப்புணர்வைக் கொண்டிருந்தாலும், இந்தப் போக்கிலிருந்து ஒரு விலகல் காணப்படுகிறது.
லாப்ஸ் எரிவாயு
“இந்தப் பொருளாதார மீட்சி முக்கியமானது, ஏனெனில் லாப்ஸ் எரிவாயு சமையலுக்கு விருப்பமான தேர்வாக உருவெடுத்துள்ளது.
சுற்றுலாத் துறையின் மீள் எழுச்சி மற்றும் பரந்த அடிப்படையிலான கைத்தொழில் செயற்பாடுகள் என்பனவும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அதிக தேவைக்கு பங்களித்தன” என லாஃப்ஸ் எரிவாயு குழுமத்தின் முக்கிய அதிகாரி பியதாச குடபாலகே தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு உள்ளூர் தொழில்துறை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், 2022 பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நிறுவனத்திற்கு சவாலாக இருந்தன.
“எல்பிஜியின் தடையற்ற விநியோகத்தைப் பேணினாலும், நெருக்கடிக்கு முந்தைய அளவை எட்டுவதற்கு நாங்கள் சிரமப்பட்டோம், குறிப்பாக சில்லறை விற்பனைப் பிரிவின் தேவை 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை குறைவாகவே இருந்தது,” என்று குடபாலகே தெரிவித்துள்ளார்.
மேலும், எல்பிஜிக்கான மாதாந்திர விலை திருத்தங்கள் மற்றும் எல்பிஜி மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி அறிமுகப்படுத்தப்பட்டதால் நுகர்வோர் தங்கள் நுகர்வு நடத்தையை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.