ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைகளுக்கு விலைபோகக்கூடியவர்களை வைத்துக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத்தரப்புக்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

