வரி அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கான முக்கிய தகவல் ஒன்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) வெளியிட்டுள்ளார்.
அதன் போது, வரி அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றால், தாங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாதவர்களாக இருந்தால் அதனை அறிவித்து வரி செலுத்துவதை தவிர்க்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பபிட்டுள்ளார்.
வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இது வரையில், 23 லட்சம் பேருக்கு வரி அடையாள இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் மட்டும் 13 லட்சம் பேர் வரி இலக்கத்தை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.
இதேவேளை, ஜூலை மாத இறுதிக்குள் வரி இலக்கம் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 73 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.