முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ச,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவராக
நியமிக்கப்படவுள்ளார்.
வெளியான தகவல்..
இந்த நியமனம் கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படும்
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவராகவும் மஹரகம தொகுதி அமைப்பாளராகவும்
சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

