முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல நேற்று (13) கைது செய்யப்பட்டார்.
சபுகஸ்கந்த, தெனிமல்ல பிரதேசத்தில் 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்றைய தினமே அவருக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது உள்ளிட்ட மேலும் பல அரசியல் தகவல்களை ஆராயும் வகையில் வருகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,

