முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு தமிழ் நாடுடனான உறவு மிக முக்கியம் – அமைச்சர் சப்ரி

Courtesy: Sivaa Mayuri

இன்னும் சில வாரங்களில் இலங்கை அதன் கடன் மறுசீரமைப்பு செயன்முறை குறித்து சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தமிழ் நாடுடனான உறவு இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியம் எனவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு ஏற்ப, இலங்கை கடனை செலுத்த ஆரம்பவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பொறுத்தவரையில், நாடு பல தசாப்தங்களாக அதன் மோசமான நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது ஒரு முக்கிய படியாகும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

புவிசார் அரசியல் செல்வாக்கு 

இதேவேளை, இலங்கையை பொறுத்தவரை, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கிறது.

இந்த இரண்டு நாடுகளும் இலங்கைக்கு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களாக இருப்பதால், இலங்கைக்குள் புவிசார் அரசியல் செல்வாக்கினை செலுத்த முனைகிறார்கள் என்றும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு தமிழ் நாடுடனான உறவு மிக முக்கியம் - அமைச்சர் சப்ரி | Debt Restructuring By Month End

கடந்த வாரம் 12.5 பில்லியன் டொலர் சர்வதேசப் பத்திரங்களை மறுசீரமைக்க முன்னோக்கி நகர்த்துவதற்கு இலங்கை அதன் சில பத்திரதாரர்களுடன் தற்காலிக இணக்கத்தை எட்டியுள்ளது.

எனினும், இப்போது மீதமுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு

முன்னதாக, 37 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்ட இலங்கை, கடந்த ஜூன் மாத இறுதியில் 10 பில்லியன் டொலர் கடனை மறுகட்டமைக்க ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட அதன் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

இலங்கைக்கு தமிழ் நாடுடனான உறவு மிக முக்கியம் - அமைச்சர் சப்ரி | Debt Restructuring By Month End

மொத்தத்தில், இந்த கடன் மறுசீரமைப்பின் மூலம் இலங்கைக்கு 8 பில்லியன் டொலர்கள் தள்ளுபடி கிடைத்துள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களுடனான நெருக்கமான உறவுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகமாக உதவும் என்றும் அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.