முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐந்து வருடங்களுக்கு பின் இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப்போட்டி

வவுனியா (Vavuniya) தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி ஐந்து வருடங்களுக்கு பின்னர்
சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரனின் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று
(10.07.2024) பிற்பகல் நடைபெற்றது.

நினைவுப் பரிசில்கள்

தேசியக் கொடி, வலயக் கொடி, கோட்டக் கொடி, தெற்கு வலய பாடசாலைகளின் கொடிகள்
ஏற்றப்பட்டு சத்தியப் பிரமாண நிகழ்வின் பின் விளையாட்டு நிகழ்வுகள்
இடம்பெற்றன.

five-years-later-vavuniya-south-zone-games

இந்நிலையில், அதிதிகள் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி கல்விப்
பணிப்பாளர்களினால் கௌரவிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு தேசிய ரீதியில்
சாதித்த வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான நினைவுப்
பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

five-years-later-vavuniya-south-zone-games

இந்த நிகழ்வில் பிரதம
விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனும் அதிதிகளாக வவுனியா
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், துணுக்காய் கல்வி வலய பிரதி
கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜெய்கீசன் மற்றும் மன்னார் கல்வி வலய உதவிக் கல்விப்
பணிப்பாளர் தபேந்திரலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய
ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள்
எனப் பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்