தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட
பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் மட்டக்களப்பு (Batticaloa) ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று(14.07.2024) தமிழ் மக்கள்
பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம் பெற்றுள்ளது.
பல்வேறு தீர்மானங்கள்
இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்களின்
நிர்வாகிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதில்
பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


