திருகோணமலை (Trincomalee) பகுதியில் வர்த்தகர் ஒருவரை கெப் வண்டியில் கடத்திச் சென்று கொன்று காரில் தீ வைத்து கொளுத்தியுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட காரணத்திற்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.