முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதியில் இருந்து பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா நாளை காலை 8 மணிக்கு முன்னதாக வெளியேற்றப்படாவிட்டால், அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சினைகள் யாவரும் அறிந்த ஒன்று.

நிர்வாகம் சார்ந்த பிரச்சினை

இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Dr Archuna Issue Medical Officers Strike

தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சினை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது.

எனவே உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள்?

பணிப்புறக்கணிப்பு

ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Dr Archuna Issue Medical Officers Strike

நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர், அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.  

தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார்.

மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார்.

கட்டாய இடமாற்றம்

வைத்தியர்களது மூடப்பட்டிருந்த விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்

இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Dr Archuna Issue Medical Officers Strike

இதனால் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர்கள் மீது இவர் கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.  

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.