யாழ்ப்பாணம் (Jaffna), நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரையில் இருந்த புத்தர் சிலையைத் திருடிய பின்னர் படகொன்றின் மூலம் குறிகாட்டுவான் பகுதிக்கு சென்ற நிலையில், இளைஞன் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் அந்த இளைஞரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.