பழந்தமிழர் பண்பாட்டின் தொல்லியல் அடையாளங்களை வெளிக்கொண்டு வரும் ஆய்வொன்று
யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆனைக்கோட்டை(Anaikoddai) பகுதியோன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த தொல்லியல் ஆராய்ச்சி நடவடிக்கையானது 1980 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, யாழ்ப்பாணத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்பு கூடுகள் இரண்டும், அவற்றின் ஒரு எலும்புக்கூட்டின் தலையில், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மோதிரமொன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், போர்சூழல் காரணமாகவும், சில தலையீடுகள் காரணமாகவும் அந்த தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
எனவே 44 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வின் போது பல்வேறு வகையான தொல்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையானது, வரலாற்று சார்ந்த அம்சங்களுக்கு புதிய வெளிச்சம் ஊட்டுகின்றது.
சில தடயங்களை வைத்து பார்க்கும் பொழுது ஆனைக்கோட்டைக்கும் அயல்நாட்டிற்குமிடையிலான தொடர்புகளை அறியகூடியதாக உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் உள்ள கண்டுப்பிடிப்புகள் தொடர்பான பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
https://www.youtube.com/embed/J8dlbcEbJvQ