நாட்டில் இன்று (19) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைக்குறைப்பை லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது.
இதன்படி, உளுந்து, பால்மா, கோதுமைமா, வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை சீனி, கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
குறித்த விலைக் குறைப்பின் படி, ஒரு கிலோ உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 1,400 ரூபாவாக உள்ளது.
அத்தோடு, 400 கிராம் பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 910 ரூபாவாக உள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
விலை குறைப்பு
அத்தோடு, ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 200 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 260 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 258 ரூபாவாகும்.
இந்தநிலையில், குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.