பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதி
அத்தோடு, 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஒகஸ்ட் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான வெட்டுப் புள்ளிகளை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.