முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைக்கால கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவு நிலுவைத் தொகை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு குறித்த பணம் வழங்கப்படுமென ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவது தொடர்பான யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

இடைக்கால கொடுப்பனவு

இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஓய்வூதிய கொடுப்பனவுடன், மேலதிகமாக மூவாயிரம் ரூபாய் இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Additional Payment For Govt Pensioners Sri Lanka

அத்துடன், கொடுப்பனவு நிலுவைத் தொகையன மூவாயிரம் ரூபாவும் ஒக்டோபர் மாத ஓய்வூதிய கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு எதிர்ப்பு

ஓய்வதியதாரர்களின் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நிவர்த்தியாகும் வரையில் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்த நடவடிக்கைக்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Additional Payment For Govt Pensioners Sri Lanka

மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவை செப்டெம்பர் மாதம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, குறித்த நடவடிக்கையை ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்