முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞன்

ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி களனி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன், தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி, பெத்தியகொட, மாவெல்ல வீதியில் வசித்து வந்த தனிது சஸ்மித ரவிஹன்ச என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவிக்கையில்,

ஜப்பானிய மொழி

களனி தர்மலோக வித்தியாலயத்தில் உயர்தரம் வரை வர்த்தகம் கற்று, பின்னர் ஜப்பானிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த குறித்த இளைஞன், ஜப்பானின் நகோயாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அண்மையில் சென்றுள்ளார்.

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞன் | Sri Lankan Boy Death In Japan Yesterday

“எனது மகன் இலங்கையிலிருந்து ஜப்பான் சென்று நான்கு மாதங்கள் ஐந்து நாட்கள் ஆகின்றன. சட்டரீதியாகவே அவர் சென்றார். ஜப்பானிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். மகனை இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு அனுப்ப 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

கடனுக்கு பணம் பெற்றே அவரை ஜப்பானுக்கு அனுப்பினோம். மகன் முல்லேரியா பகுதியில் உள்ள முகவர் ஊடாக ஜப்பான் சென்றுள்ளார்.

தொலைபேசி அழைப்பு

மகன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. மகன் உயிரிழப்பதற்கு முன்னர் 45 நிமிடங்கள் என்னிடம் பேசினார்.

எனது மகன் தனது முந்தைய வேலையை இழந்தார். மற்றுமொரு வேலைக்கான நேர்முகத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞன் | Sri Lankan Boy Death In Japan Yesterday

கடந்த ஐந்தாம் திகதி அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன். எனினும் எனது அழைப்பிற்கு பதில் இல்லை. அதன் பிறகு அவரே எனக்கு அழைப்பேற்படுத்தி நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றதாக கூறினார்.

கடந்த 6ஆம் திகதி ஜப்பானில் வாழும் எங்கள் அயல்வீட்டு பெண், மகன் உயிரை மாய்த்து கொள்வதாக தன்னிடம் கூறியதாக கூறினார்.

வட்ஸ்அப்பில் பதிவிட்டிருந்தார், அதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார் என கூறிய நிலையில் அவரை மகனின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறினேின் அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மகனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்தேன். மகனின் சடலத்தைப் பார்க்க அரசாங்கம் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தாயார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.