முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை வரை மட்டும் 250 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K Stalin) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (S. Jaishankar)  எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள் 22-7-2024 அன்று “IND-TN-10-MM-2517” மற்றும் “IND-TN-10-MM-284” பதிவு எண்கள் கொண்ட படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்றிருந்தனர்.

கடற்றொழில் படகுகள்

இந்தநிலையில், அவர்களும், அவர்களது கடற்றொழில் படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்! | Mk Stalin Urges Fishermen Release In Sri Lanka

கடற்றொழிலாளர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அதிகபட்ச கைது

அத்துடன், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 கடற்றொழிலாளர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்! | Mk Stalin Urges Fishermen Release In Sri Lanka

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இது என தமிழக முதல்வர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்