நாட்டின் எல்லையை இந்தியாவிற்கு விற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பொது பாதுகாப்பு அமைச்சர்
”இந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்று அழைக்கப்படுபவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.
மேலும், நாட்டின் எல்லை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
இன்று தேசபக்தர்கள் எங்கே? தேசிய வளத்தை காப்பாற்ற வேண்டும் என்று பேசியவர்கள் இன்று எங்கே?
இலங்கை வரலாற்றில் 2.7 மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளது. ஊழலைப் பற்றிப் பேசுபவர்களுக்கு ஊழலுக்கு துணைபோகும் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பெயர் நினைவில் இல்லை.
திசைகாட்டி கூட்டணி
இங்கு திசைகாட்டி கூட்டணிக்கு ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் அவரது ஊழல்களை பகிரங்கப்படுத்துங்கள்.
வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்கள் குறித்து கடந்த ஆண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதுவரையில் திரான் தொடர்பில் இலஞ்சஊழல் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.” என்றார்.