அமெரிக்க (USA) மென்பொருள் நிறுவனமான பலண்டிர் (Palantir), பிரபல மைக்ரோ சொப்ட்டுடன் நிறுவனத்துடன் தமது கூட்டமைப்பை அறிவித்துள்ளது
அந்தவகையில், மென்பொருள் மற்றும் தரவு ஒருங்கிணைப்பு நிறுவனமான பலண்டிரின் மென்பொருளை (Palantir Software) மைக்ரோ சொப்டின் (Micro Soft) கிளவுட் சேவைகள் மற்றும் அஸூர் ஓபன் ஏஐ (Azure OpenAI) சேவையுடன் ஒருங்கிணைக்கும் என்று மைக்ரோசாப்ட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த இரு நிறுவனங்கள் தமது கிளவுட் (Cloud) மற்றும் ஏஐ (AI) திறன்களை இணைத்து, அமெரிக்காவின் (US) பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு துறைகளுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்துறை
குறிப்பாக இவை அமெரிக்க இராணுவத்துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் ஏஐ தொழிநுட்பம் மூலம் உளவுத்துறையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதை பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளன.
மேலும், இது தொடர்பான பயிற்சிகள் மற்றும் செயலமர்வுகளை அரசாங்கப்பணியாளர்களுக்கு வழங்க மைக்ரோ சொப்ட் மற்றும் பலண்டிர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.