முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு தண்ணீரூற்றில் ஏற்பட்ட மாற்றம் : பாராட்டும் ஆர்வலர்கள்

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு தண்ணீரூற்றில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்றலில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வர்த்தக நிலையத்திற்கு முன்னுள்ள இடத்தில் கவனக்குறைவினால் கவனிக்கப்படாது இருந்து வந்த சூழல் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்து வந்தது.

நீர் தேங்கி சதுப்பாகிய நிலத்தோடு எண்ணெய் விற்பனையின் போது கசிந்து சேரும் எண்ணெய்க் கழிவினாலும் வர்த்தக நிலையத்திற்கு முன்னுள்ள பகுதியில் பொதுமக்களின் செயற்பாட்டுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டிருந்தது.

சுட்டிக்காட்டல்

இது தொடர்பில் ஆர்வலர்கள் தங்களின் அதிருப்தியினை வெளியிட்டு வந்திருந்த நிலையில் அண்மையில் இந்த நிலைமை தொடர்பில் ஆர்வலர்களின் அதிருப்தியினை ஊடகங்கள் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தன.

முல்லைத்தீவு தண்ணீரூற்றில் ஏற்பட்ட மாற்றம் : பாராட்டும் ஆர்வலர்கள் | Change Mullaitivu Activists Appreciate

செய்தி வெளியிடப்பட்ட சில நாட்களில் குறித்த வர்த்தக நிலையம் அது தொடர்பில் கருத்தில் எடுத்து முன்னெடுத்த செயற்பாடு தொடர்பிலேயே ஆர்வலர்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஏற்பட்ட மாற்றம்

நீர் தேங்கி சதுப்பாகிய நிலத்திற்கு சீமெந்து இட்டு காபெற் வீதியுடன் இணைத்து தொடராக நடைபாதை போல் குறித்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது.

அத்தோடு எண்ணெய்க் கசிவு பொதுமக்களுக்கு இடையூறாக அமையாதபடி அந்த நிலப்பகுதியில் அமைப்பு மாற்றங்களை செய்திருக்கின்றார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்.

முல்லைத்தீவு தண்ணீரூற்றில் ஏற்பட்ட மாற்றம் : பாராட்டும் ஆர்வலர்கள் | Change Mullaitivu Activists Appreciate

வர்த்தக நிலையத்திற்கு முன்னுள்ள பகுதியிலேயே மேற்கூறிய அசௌகரிய நிலை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அது கவனமெடுக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்த மாற்றம் பொதுமக்களுக்கு சௌகரியமாக இருக்கும்படி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

வர்த்தக நிலையத்தின் சூழலினை பொதுமக்களுக்கு சௌகரியமாக இருக்கும் வகையில் அதனைத் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் பேணிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து அவதானித்து வந்த அவதானிப்பாளர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.