முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் கூர்மையாக அதிகரிப்பு

Courtesy: Sivaa Mayuri

சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்தியமை தொடர்பில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 31,172  சம்பவங்களுடன்  ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் 4,380 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி, சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் 38 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு தேவைப்பாடு

ஆணையகத்தின் 2023 ஆண்டு அறிக்கையானது, 2,526 குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

எனினும் 2024 இன் முதல் ஆறு மாதங்களுக்குள், இந்த எண்ணிக்கை  விஞ்சியுள்ளது.

நாட்டில் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் கூர்மையாக அதிகரிப்பு | Sharp Rise In Child Abuse Cases In Sri Lanka

அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட மிகவும் குழப்பமான போக்குகளில், சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகளின் கூர்மையான அதிகரிப்பு என்பது முக்கியம் பெற்றுள்ளது 

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1,016 கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவாகிய 721 சம்பவங்களில் இருந்து 41% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இணைய மிரட்டல்

இந்தக் கொடூரச் செயல்கள் உடல்ரீதியான வன்முறை முதல் கடுமையான புறக்கணிப்பு வரை பலவிதமான தவறான நடத்தைகளை உள்ளடக்கியுள்ளது.

இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இணைய அச்சுறுத்தல்களின் அதிகரிப்பையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 403 சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் கூர்மையாக அதிகரிப்பு | Sharp Rise In Child Abuse Cases In Sri Lanka

2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 311 சம்பவங்களுடன் ஒப்பீடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

குறிப்பாக, இணைய மிரட்டல் சம்பவங்கள்,  நிர்வாண புகைப்படங்கள் விநியோகம் சம்பந்தப்பட்டவை அதிகளவில் உயர்ந்துள்ளன.

நாட்டில் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் கூர்மையாக அதிகரிப்பு | Sharp Rise In Child Abuse Cases In Sri Lanka

கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன, 2024 இல் இதுவரை 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26 ஆக இருந்ததாக சிறுவர் பாதுகாப்பு ஆணையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்