முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூண்டுலோயாவில் தீக்கிரையாகிய தொழிலாளர் குடியிருப்புகள்

பூண்டுலோயா – கீழ்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக
தீக்கிரையாகியுள்ளன.

நேற்று இரவு (16.08.2024) 8 மணியளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20
வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த
70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதால் அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க
முற்பட்ட போதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

பூண்டுலோயாவில் தீக்கிரையாகிய தொழிலாளர் குடியிருப்புகள் | Fire Incident In Punduloya Burntout Workers Houses

பின்னர் பூண்டுலோயா காவல்துறையினர், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவர நடவடிக்கை எடுத்த நிலையில் சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், 17 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான
ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப்
புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததால் அங்கு குடியிருந்த 70 பேர் தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயாவில் தீக்கிரையாகிய தொழிலாளர் குடியிருப்புகள் | Fire Incident In Punduloya Burntout Workers Houses

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், கொத்மலை பிரதேச சபையினர்,
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின்
ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என
தெரிவித்துள்ள பூண்டுலோயா காவல்துறையினர், நுவரெலியா காவல்துறை கைரேகை அடையாளப்பிரிவுடன்
இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்