முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம்

மட்டக்களப்பு (Batticaloa), வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூரில் இடம்பெற்ற குழப்ப நிலையை தொடர்ந்து பெற்றோலிய
கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி
துப்பாக்கி பிரயோகம் செய்தமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடல் பிரதேசத்தை அண்டிய லண்டணில் வசித்துவரும் தமிழர் ஒருவருக்கு
சொந்தமான 11 ஏக்கர் காணி, கடந்த காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்
தலைவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

துப்பரவு பணி

இந்தநிலையில், குறித்த காணியை துப்பரவு செய்து கம்பி வேலி அடைக்கும் நடவடிக்கைக்காக சம்பவதினமான இன்று ஜே.சி.பி இயந்திரத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைர் சென்று துப்பரவு பணியை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு ஒன்று கூடிய மக்கள் அவருடைய காணியின் எல்லையை தாண்டி துப்பரவு பணி இடம்பெறுவதாகவும் அவருடைய காணியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். 

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air 

எனவே, தற்போது கடல் இருக்கும் இடத்தில் இருந்து அவரது காணி பின்நோக்கி
இருப்பதாக நினைத்து காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இரு சாராருக்கும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாணைகள்

இதனையடுத்து, ஜே.சி.பி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைந்ததையடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air

இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து விசேட
அதிரடிப்படையினர் சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்ததுடன் அவரையும் ஜே.சி.பி இயந்திரத்தையும் பாதுபாப்பாக அங்கிருந்து
வெளியேற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.