கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கிராம உத்தியோகத்தர் நிபுணத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe ) இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம்
அந்தவகையில், வேலைநிறுத்தம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், தேர்தல் முடியும் வரை வழமை போன்று கிராம உத்தியோகத்தர்கள் சேவைகளை வழங்குவதாக சங்கத்தின் இணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.