முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்

புத்தளம் – கற்பிட்டி, அல்மனார் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காட்டுப்பகுதியிலுள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று (21) மாலை மீட்கப்ட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் (வயது 37) எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு வீட்டை விட்டு துவிச்சக்கர வண்டியில் வெளியேறிச் சென்றிருந்ததாகவும், அதனையடுத்து அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று(21) கற்பிட்டி – அல்மனார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த நபர் மரமொன்றில் தொங்கிய நிலையில் இருப்பதனை அவரது சகோதரர் கண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பின்னர், இதுபற்றி கற்பிட்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புத்தளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் | A Family Member Was Rescued As A Corpse

இதன்போது, மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும், இரண்டு பாதணிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் | A Family Member Was Rescued As A Corpse

அத்துடன், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நாசிம் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து, அங்கு முதற்கட்ட மரண விசாரணையை நடத்தி, புத்தளம் மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கமைய சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.