பதுளை(badulla) ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பிரதேசத்தில் பதுளை இலங்கை(sri lanka) போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று கழன்று விபத்துக்குள்ளான நிலையில் சாரதி பாரிய விபத்தைத் தவிர்த்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (22ம் திகதி) ஸ்பிரிங்வெளி பத்தேகமவில் இருந்து பதுளை நோக்கி 75 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, ரோக்ஹில் வீரியபுர பகுதியில் பேருந்தின் பின் இடது சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்தன.
சாரதியின் சாமர்த்தியத்தால் நடுவீதியில் நிறுத்தப்பட்ட பேருந்து
சாரதியின் சாமர்த்தியத்தால் பேருந்து நடுவீதியில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பதுளை டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 75 பேர் வரை பயணித்துள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுளை காவல்துறையினர் மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் சாமர்த்தியத்தால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாத நிலையில் அவருக்கு பலரும் தமது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.