யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று காரணமாக
20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும், இதன் காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாடசாலைக்கு சேதம்
இதேவேளை, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் புலோலி
நாகதம்பிரான் ஆலயமும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உரும்பிராய் சைவத்
தமிழ் பாடசாலையும் சேதமடைந்துள்ளது.