விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூட்டை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது
மக்கள் வெற்றிப் பேரணி சஜித் பிரேமதாச தலைமையில் இன்று
(25) முற்பகல் பொலன்னறுவை (Polonnaruwa) ஹிங்குராங்கொட (Hingurankota) நகரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன மருந்துகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விவசாய இரசாயன
மருந்துகள் மற்றும் உரம் என்பனவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு இருட்டிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமான விலைக்கு பொருட்கள் வழங்கப்படும்.
உரவிநியோகத்தின் போது கமநல சேவைகள் மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு
வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலை ஒன்று
பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.