களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ, ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற வேளை பொது சுகாதார
பரிசோதகரான சிவயோகபதி கௌதமன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பொது
சுகாதார பரிசோதராக கடமையாற்றியுள்ளார்.
இருவர் உயிரிழப்பு
டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார
பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே
இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய 26 வயதான கௌதமன் மற்றும் 28 வயதான ஹர்ஷநாத் ஆகிய இரு பொது சுகாதார
உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறுதிக் கிரியைகள்
இவர்களில் எஸ்.கெளதமன் அச்சுவேலி பத்தமேனியை சேர்ந்தவர் என்பதுடன் எஸ். ஹர்ஷநாத் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்.
இந்த நிலையில் அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) மதியம் ஒரு மணியளவில் பத்தமேனி
தீத்தாங்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.