இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட (Rear Admiral Kanchana Banagoda) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா (Priyantha Perera), ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.
புதிய அதிகாரி நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) 2024 ஒகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கிழக்கு கடற்படை தளபதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.