முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர்
ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு
செய்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியினால் தேர்தல் ஆணையாளர் மற்றும்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 24ஆம்
திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரம்
விநியோகித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அதனை தடை செய்ய கோரியிருந்தனர்.

இந்நிலையில், தாம் மேற்கொள்ளவிருந்த விழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு இடையூறு விளைவித்தமை
சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,
திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நீதி
வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்க வேண்டாம்

“வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது தானே? இதனை விநியோகிக்க
முடியாது, இது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்தார்.”
எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினரை பொலிஸார் தடுத்திருந்தனர்.

விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. | Police Interfered With The Awareness Campaign

 அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும்
ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியில் நடத்தப்படும் என, இலங்கையின்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மே மாதம்
அறிவித்திருந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல்
புறக்கணிப்பு கோரிக்கையை எழுத்து மூலம் தமிழ் மக்கள் மத்தியில் விநியோகிக்க
ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.