கச்சதீவு(kachchatheevu) கடற்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் காணாமற் போயுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை(sri lanka navy) தெரிவித்துள்ளது.
இன்று(27) காலைவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடல் சீற்றத்தால் கவிழ்ந்து விபத்து
நான்கு கடற்றொழிலாளர்களுடன் வந்த தமது மீன்பிடிக் கப்பல், கடல் சீற்றத்தால் கவிழ்ந்து, கச்ச தீவில் கரை ஒதுங்கியதாக காப்பாற்றப்பட்ட கடற்றொழிலாளர் தெரிவித்தார்.
காப்பாற்றப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள்
கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கச்சத்தீவு கடற்பகுதியில் கடல் நிலைமை சவாலான போதிலும், எஞ்சிய இரண்டு (02) இந்திய கடற்றொழிலாளர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.