முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதில் கவனம் செலுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மனித உரிமை மீறல்கள் குற்றங்களை விசாரிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உடன்பாட்டைப் பெறுவதிலும் கவனம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர் | Punishment For Srilanka Civil War Criminal Anura

அரசாங்கத் துருப்புக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை நடத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது.

பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினை, பழிவாங்கும் வகையில் இருக்கக் கூடாது.

ஒருவரைக் குற்றம் சாட்டும் வகையில் இருக்கக் கூடாது.

உண்மையைக் கண்டறிய வேண்டும்

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர் | Punishment For Srilanka Civil War Criminal Anura

ஆனால் உண்மையைக் கண்டறிய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் கூட யாரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

என்ன நடந்தது என்பதை மட்டுமே அவர்கள் அறிய விரும்புகிறார்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்