முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பணக்காரர் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் அதானி

2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த வந்த முகேஷ் அம்பானியை(Mukesh Ambani.) பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் கௌதம் அதானி(Gautam Adani.) மற்றும் அவரது குடும்பத்தினர்.

இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11.6 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும்.

2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி தரவுகளின்படி, சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம்

2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், கௌதம் அதானி (62) மற்றும் அவரது குடும்பத்தினர், நாட்டின் முதல் பணக்காரர் என்ற அடையாளத்தோடு இருந்த வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிவிட்டு, ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்திய பணக்காரர் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் அதானி | Gautam Adhani Is The Richest Person In The India

முகேஷ் அம்பானி 10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

முதன் முறையாக இடம்பிடித்த ஷாருக் கான்

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆறு தனிநபர்கள், தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார்கள். அதில், கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, ஷிவ் நாடார், சைரஸ் எஸ். பூனாவாலா,. கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிஷன் தமனி ஆகியோர் அடங்குவர்.

இந்திய பணக்காரர் பட்டியல் : அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் அதானி | Gautam Adhani Is The Richest Person In The India

இதேவேளை, ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், ஹிந்தி நடிகர் ஷாருக்கான்(shah rukh khan) முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். இவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் மதிப்பு உயர்ந்ததன் மூலம், இவர் இந்த பட்டியலில் இடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.