மாதாந்த விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
குறைவடைந்த விலை
லங்கா வெள்ளை
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 307 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.