கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28,003 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 175,163 ஆகும்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை வருமானம்
இதற்கமைய, 07 மாத காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு முதல் 7 மாதங்களில் 1,71,864 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதுடன், அந்த காலகட்டத்தில் பெறப்பட்ட பணம் 3,363.6 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.