முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தவறான முடிவெடுப்பவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

Courtesy: H A Roshan

நாட்டில் தவறான முடிவுகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை நேற்று வந்தடைந்துள்ளது.

இந்த தொடர் சைக்கிளோட்ட வீரர்கள் திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டுள்ளனர்.

தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை நேற்று(03.09. 2024)ஏற்பாடு செய்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் 

இலங்கையில் நாளொன்றுக்கு தவறான முடிவெடுப்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது.

இந்த விழிப்புணர்வூட்டல் தவறான முடிவுகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுப்பவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம் | Suicide Awareness Series Cyclotum Trincomalee

சிசிசி 1333 (ccc1333) என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் சைக்கிளோட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த தொடர் சைக்கிளோட்டமானது நேற்று(03) திருகோணமலைக்கு வந்தடைந்ததுடன் அவர்களுக்கு மதிய உணவு ரோட்டரி இல்லத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் தவறான முடிவின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுப்பவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம் | Suicide Awareness Series Cyclotum Trincomalee

மேலும், தவறான முடிவெடுக்கும் மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்