முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40 தொடக்கம் 50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Report Sl Tamil Meteorology

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரியன் அதன் வெளிப்படையான தெற்கு நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கப் போகிறது.

மேலும், இன்று (04) களுத்துறை, நிவித்திகல, கஹவத்த மற்றும் ஒகந்த ஆகிய இடங்களில் நண்பகல் 12.09 மணியளவில் சூரியன் மேல்நோக்கி நிற்கும் இலங்கையின் அண்மையிலுள்ள இடங்களளென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.